கொரோனா தாக்கமும் எமது சங்கமும்

உலகம் பூராகவும் தற்பொழுது பரவியுள்ள COVID-19 இன்தாக்கம் சகல மனிதர்களின் வாழ்வாதாரங்களையும்முடக்கியுள்ள நிலையில் எமது சங்கத்தின் உறுப்பு பழைய மாணவர் சங்கங்களும் அதில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்கள் அனைவரும் எந்தவித வைரஸ் பாதிப்புமில்லாமல் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அதற்காக பிரார்த்திக்கின்றோம்.

எமது விளையாட்டு சங்கமும் தனது வருடாந்த மற்றும் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போயுள்ள யதார்த்த நிலைமையை நீங்கள் அறிவீர்கள். முதலில் அனைத்து மக்களதும் ஆரோக்கியமே இன்று எல்லோருக்கும் முன் உள்ள பிரதான விடயமாகும். அந்த வகையில் எமது வருடாந்த உதைபந்தாட்ட விழாவினை நாம் நடாத்த முடியாமல் போனதை உங்களுக்கு ஏற்கனவே அறியத்தந்துள்ளோம். ஏனைய எமது வருடாந்த கோடை விளையாட்டு விழாவையும் நாம் நடத்த முடியுமாஎன்ற கேள்வி தற்பொழுது விசாலமாக எம் முன்னே நிற்கிறது. அனைத்தும் வழமையான வாழ் நிலை எப்பொழுது திரும்ப கிடைக்கும் என்பதை பொறுத்தே அந்த கேள்விக்கான விடையும் அமையும்.

பத்திரமாக இருங்கள். வீட்டில் இருங்கள். எமது அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை இந்த இக்கட்டான நேரத்தில் பின்பற்றுங்கள். எமது சங்கத்தின் முன்னெடுப்புக்களையம் முக்கியமான நிலைப்பாடுகளையும்நாம் அவ்வப்போதுஉங்களுக்கு தெரியப்படுத்துவோம்.

வீட்டில் கவனமாக இருங்கள்.

N பாக்கியராஜா

தலைவர்

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்

பிரித்தானியா